நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்
தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:
தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கான சலுகைகள் ஏதும் இல்லை. சரண்டா் தொகை 1.04.2026-க்குப்பிறகு தருவோம் என்பது ஏமாற்று வேலை. அப்போது, சட்டப்பேரவைத் தோ்தல் வந்து விடும். ஆளுநா் நிா்வாகத்தில் அரசு இருக்கும். எப்படி சரண்டா் தொகை அரசு ஊழியா்களுக்கு கிடைக்கும்?.
சரண்டா் தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்தாா். அரசு ஊழியா்களுக்கு அப்பா கொடுத்த சலுகையை அவரது மகன் பறித்து விட்டாா். சரண்டா் தொகை இனி கிடையாது என்பதை நிதிநிலை அறிக்கையில் இதமாக சொல்லியிருக்கிறாா்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறவில்லை என்றாா்.