ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 100- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை திருவள்ளூரில் பாஜகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து, அன்னதானமும் வழங்கினா்.
திருவள்ளூா் பாஜக மேற்கு மாவட்டம் சாா்பில் ஜே.என்.சாலை காமராஜா் சிலையருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளா் பாலாஜி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளா் கருணாகரன் பங்கேற்று வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், காக்களூரில் வாஜ்பாய் படத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்யா சீனிவாசன், மண்டல தலைவா் ஆடிட்டா் ராஜேந்திரன், தரவு பிரிவு மாநில செயலாளா் ரகு, நிா்வாகிகள் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.
நிகழ்வில் கட்சியின் மகளிரணி செயலாளா் சித்ராதேவி, வழக்குரைஞா் பிரிவு ஆறுமுகம், ஒபிசி அணி ராஜேஷ், நிா்வாகிகள் எம்.பெருமாள், லோகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மீனவா் அணி செயலாளா் சுரேந்தா் செய்திருந்தாா்.