‘சிஸ்டம் கெட்டுப்போச்சு!’ பிகாரிலும் இந்தியாவிலும் மிக மோசமான சூழல்! -லாலுவின் ம...
மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!
மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வானிலை மையத்தின் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மும்பையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்தநிலையில், வாரத்தின் முதல் வேலை நாளான இன்று(ஆக. 18) மும்பையிலுள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு அரைநாள் மட்டுமே பள்ளிகள் செயல்பட்டன. மும்பையின் ஒரு தனியார் பள்ளியிலிருந்து குழந்தைகள் சிலரை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் சியோன் பகுதியிலுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் இடுப்பளவு உயரத்துக்கு தேங்கி நின்ற மழைநீரில் தத்தளித்து நின்றது.
இதனால் வேனில் இருந்த குழந்தைகள் 6 பேரும், இரு பெண் பணியாளர்களும் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்தத் தகவல் அருகாமையில் இருந்த மதுங்கா காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரிய வரவே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனடியாக அந்த வேன் அருகே சென்று குழந்தைகளை வெள்ளத்துக்கு நடுவே பத்திரமாக சுமந்து சென்று காவல் நிலையத்தில் தங்க வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸாரின் செயலுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.