செய்திகள் :

"முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் வேலை" - பாஜக முன்னாள் எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

post image

உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள டோமரியாகஞ்ச் தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவர் ராகவேந்திர பிரதாப் சிங். இவர் அடிக்கடி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி சர்ச்சையில் சிக்குபவர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து, " முஸ்லிம் பெண்ணை அழைத்து வரும் இந்து இளைஞருக்கு, நாங்கள் வேலை ஏற்பாடு செய்து கொடுப்போம்" என்று பேசியிருக்கிறார்.

அவர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட்டுள்ளனர்.

ராகவேந்திர பிரதாப் சிங்கின் இந்த பேச்சு, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கண்டனம்

இது"குற்றச் செயல்களை நேரடியாகத் தூண்டும் செயல்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கடுமையாக சாடியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்துக்களே, நீங்கள் வேலை விரும்பினால், முதலில் ஒரு கெட்டவராக மாறி, வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஓடிவிடுங்கள்" என்று பாஜக கூறுகிறது.எந்த இந்து பெற்றோர் தங்கள் மகன்கள் இழிவானவர்களாக இருக்க விரும்புகிறார்கள்?இது உலகில் இந்து மதத்தின் அடையாளமாக மாறுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராகவேந்திர பிரதாப் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்... மேலும் பார்க்க

குருபூஜை: "எடப்பாடிதான் எங்கள் எதிரி" - செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று முத்துராமலிங்கனர் சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுக தொண்... மேலும் பார்க்க