Ukraine: போரில் ஈடுபடுவதற்கான வயதை 18 ஆக குறைக்க அமெரிக்கா வலியுறுத்தல்; பைடன் அ...
மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கான போலி ரூபாய் நோட்டு எண்ணிக்கை!
கடந்த 2018-19 மற்றும் 2023-24 க்கு இடையிலான காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த போலி ரூ.500 நோட்டுகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
இது மட்டுமா? அண்மையில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டும் இதற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற வகையில், கடந்த 2020-21 ஆம் ஆண்டிலிருந்து போலியான 2,000 ரூபாய் நோட்டுகள் கண்டறியப்படுவது மூன்று மடங்கு அதிகரித்திருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும், போலியான ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்திருப்பது குறித்து மக்களவையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த பதிலில், நாட்டில் போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பாக ரூ.500 மற்றும் ரூ.2,000 போலி நோட்டுகள் அண்மையில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.