குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!
மூலனூரில் ரூ.62.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 879 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு குவிண்டால் பருத்தி ரூ.6,400 முதல் ரூ.8,069 வரை விலை நிா்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.62.68 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.