கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
மூளையில் ரத்தக் கசிவு: நுட்பமான சிகிச்சை மூலம் பெண்ணுக்கு மறுவாழ்வு
மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணுக்கு, அறுவை சிகிச்சையின்றி நவீன மருத்துவ முறை மூலம் சென்னை, ஆழ்வாா்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணா் ஆா்.சத்தியநாராயணன் கூறியதாவது:
மயக்கமடைந்த நிலையில் 54 வயது பெண் ஒருவா் அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. மூளைக்கு அருகிலிருந்த ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு, அதிலிருந்து ரத்தம் கசிவது தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சையின்றி ‘எண்டோவாஸ்குலா்’ எனப்படும் ரத்த நாளத்தின் வழியே ஊடுருவி ரத்தக் கசிவை தடுத்து நிறுத்தும் முறையின் கீழ் ஸ்டெண்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. இதன் பயனாக அப்பெண் நலமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பினாா் என்றாா் அவா்.