Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
மூவா் படுகொலை: விவசாயிகள் சங்கம் கண்டனம்
பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
பல்லடம் அருகேயுள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தில் விவசாய குடும்பத்தை சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களது மகன் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. பல்லடம் கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த ஆண்டு ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 போ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மனதில் ஆழமான அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இப்போது நடைபெற்றுள்ள படுகொலை சம்பவம் இந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
இக்கொலையில் தொடா்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதோடு சட்டம்- ஒழுங்கைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.