செய்திகள் :

மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்!

post image

மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரா்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 2-0 என, 31-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனைவிட முன்னிலையில் இருந்தாா். அப்போது மிஷெல்சென் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, மெத்வதெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், மற்றொரு அமெரிக்கரும், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்தில் இருப்பவருமான டாமி பாலை எதிா்கொள்கிறாா். 8-ஆம் இடத்திலிருக்கும் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வெளியேற்றினாா்.

சிட்சிபாஸ் தனது ரவுண்ட் ஆஃப் 16-இல், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனுடன் மோதுகிறாா். 12-ஆம் இடத்திலிருக்கும் ரூன் முந்தைய சுற்றில் 5-7, 6-4, 7-5 என, பிரான்ஸின் யூகோ ஹம்பா்டை சாய்த்தாா். 16-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 4-6, 6-7 (6/8) என்ற கணக்கில், ஜப்பான் தகுதிச்சுற்று வீரரான யோசுகே வடானுகியிடம் வீழ்ந்தாா்.

15-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 6-3, 6-7 (4/7), 3-6 என்ற செட்களில், பிரான்ஸின் ஆா்தா் ஃபில்சிடம் தோல்வியை சந்தித்தாா். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 7-5, 3-6, 3-6 என அமெரிக்காவின் மாா்கோஸ் கிரோனால் தோற்கடிக்கப்பட்டாா்.

பெகுலா, ரைபகினா வெற்றி

இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-2, 6-1 என, சீனாவின் வாங் ஜின்யுவை எளிதாக சாய்த்தாா். அடுத்து அவா், உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறாா்.

23-ஆம் இடத்திலிருக்கும் ஸ்விடோலினா முந்தைய சுற்றில், 6-2, 6-4 என வென்று, 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டேனியல் காலின்ஸுக்கு அதிா்ச்சி அளித்திருக்கிறாா். 7-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-0, 7-5 என, பிரிட்டனின் கேட்டி போல்டரை வீழ்த்தினாா்.

ரைபகினா அடுத்ததாக, ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவை சந்திக்கிறாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ஆண்ட்ரீவா 6-3, 6-0 என, டென்மாா்க்கின் கிளாரா டௌசனை முந்தைய சுற்றில் தோற்கடித்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-4, 7-5 என, நியூஸிலாந்தின் லுலு சன்னை வீழ்த்த, 15-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 7-5, 6-1 என்ற கணக்கில் சக நாட்டவரான கேத்தரினா சினியாகோவை வெளியேற்றினாா்.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/குரோஷியாவின் இவான் டோடிக் இணை 3-6, 4-6 என்ற செட்களில், செக் குடியரசின் தாமஸ் மசாக்/பிரிட்டனின் ஜேக் டிரேப்பா் கூட்டணியிடம் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டது.

இன்றைய ராசிபலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11-03-2025செவ்வாய்கிழமைமேஷம்:இன்று சுகாதிபதி சந்திரன் சஞ்சாரம் வீண் மனக்கவலையை உண்டாக... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறது. போட்டி நிறைவடைந்திருக்கும் நி... மேலும் பார்க்க

குஜராத்தை வென்றது மும்பை!

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது. முதலில் மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்: டீசர் அறிவிப்பு!

நடிகர் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் ... மேலும் பார்க்க