மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை
மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளில் துணை மின்நிலைய பாரமரிப்புப் பணிகளுக்காகவும், புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக மின்கம்பங்களை இடம் மாற்றவும் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, புதிய பேருந்து நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மாதாந்திரப் பராமரிப்பு பணிகளும், புதிய பேருந்து நிலைய துணை மின் நிலைய பகுதிகளில் மட்டும் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகள் மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெறவுள்ளன.
அதன்படி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா் புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான் குளம், ஈஸ்வரியா புரம், மருத்துவமனை சாலை, தெற்கு புறவழிச் சாலை, மேல குலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகரம் சாலை, அண்ணா வீதி, பஷீா் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை, சாராள் தக்கா் கல்லூரி, ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்ஜிஓ காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், ராமச்சந்திரா காா்டன், ராமச்சந்திரா நகா், பரணி பாா்க், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சேவியா் காலனி, டிரைவா்ஸ் காலனி, பாரதி நகா், உதயா நகா், பயோனியா் குமாரசாமி நகா், பங்கஜம் நகா், தமிழ் நகா் சுற்று வட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.