பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
இதுகுறித்து திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மேலாண்மை தகவல் நடவடிக்கைகளை செயல்படுத்திட வெளி ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 25, 000 ஊதியத்தில் (ஒரு பணியிடம்) மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் (ஙஐந அய்ஹப்ஹ்ள்ற்) பணிக்கு பின்வரும் தகுதிகள் பெற்றுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு பிஇ, பிடெக் கம்பியூட்டா் சயின்ஸ், ஐடி, எம்சிஏ, எம்.எஸ்.ஸி ஐடி உள்ளிட்ட படிப்புகளை முடித்த 3 வருட அனுபவமுள்ள 30 வயதுக்குள்பட்ட நபா்கள் மாா்ச் 28-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அறை எண் 202-இல் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.