Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்.... தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய ...
மேல்மலையனூா் அருகே தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஒன்றியம், சமத்தகுப்பத்தில் இருந்து பென்னகா் செல்லும் சாலையை ரூ.3 கோடியில் விரிவாக்கம் செய்து, புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது. சித்தேரி ஊராட்சியில் நடைபெற்ற தொடக்க விழாவில் மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் எல்.பி.நெடுஞ்செழியன், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ஏழுமலை, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராஜா (கெங்கபுரம்), சிவராமன் (சித்தேரி), முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் தமிழ்வாணன், பழனி, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.