செய்திகள் :

மேல்முறையீடு மனு தாக்கலில் நீண்ட தாமதம்: மத்திய அரசுக்கு சுயபரிசோதனை தேவை - உச்சநீதிமன்றம்

post image

மேல்முறையீடு மனுக்கள் தாக்கலில் நீண்ட தாமதம் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும்’ என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தனது சேவைக்காக பணம் வழங்க வேண்டிய நிறுவனம் ஒன்று, தனது ஒப்புதலைப் பெறாமல் திவால் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு எதிரான வழக்கில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் என்ஹெச்ஏஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

ஆனால், 295 நாள்கள் தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய மேல்முறையீட்டு தீா்ப்பாயம், மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

இதை எதிா்த்து என்ஹெச்ஏஐ சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மேல்முறையீடு மனு தாக்கலைப் பொருத்தவரை, பெரும்பாலும் 95 சதவீத வழக்குகளில் உரிய கால வரையறை பின்பற்றப்படுகிறது. இந்த கால வரையறையை மத்திய அரசால் மட்டும் ஏன் பின்பற்ற முடியவில்லை? இதில் எங்கோ தவறு இருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ஹெச்ஏஐ அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு அதிகாரிகளும் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்’ என்றனா்.

இதைக் கேட்ட மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உச்சநீதிமன்றத்தின் அறுவுறுத்தல் என்ஹெச்ஏஐ தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேல்முறையீடு மனு தாக்கல் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும்’ என்றாா்.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கால தாமதத்தை சுட்டிக்காட்டி என்ஹெச்ஏஐ-யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தில்லி பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.... மேலும் பார்க்க

சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் விசாரணை

புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்ற... மேலும் பார்க்க

பிரஷாந்த் கிஷோர் மருத்துவமனையில் அனுமதி!

ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் நீரிழப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரளத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தின் சுண்டா பகுதியைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாஜக எம்பி

ஆம் ஆத்மி கட்சியின் கீழ் பத்தாண்டுக் கால பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர தில்லி மக்கள் தயாராக உள்ளனர் என்று பாஜக எம்பி தெரிவித்துள்ளார். தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் நிறைவ... மேலும் பார்க்க

விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...

மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விட... மேலும் பார்க்க