செய்திகள் :

மேஷம்: `ஞானம் கூடும்; ஒரு விஷயத்தில் கவனம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்

post image

உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 11-ம் இடத்திலும் கேது பகவான் 5-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். ராகுபகவான் நல்லதொரு முன்னேற்றத்தையும், கேது பகவான் தகுந்த அனுபவங்களையும் தந்து வழிநடத்துவார்கள்.

ராகு பகவான் தரும் பலன்கள்

1. ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும், புதிய முயற்சிகளில் வெற்றியையும், பண வரவையும் கொடுப்பதுடன், வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவார். குடும்பத்தில் இருந்துவந்த சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாம் மாறி அமைதி திரும்பும்.

2. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். உங்கள் பிள்ளைகள் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உங்கள் மகளின் திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மேஷம்

3. உங்கள் மகனுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ராகுவின் அருளால், சொத்து வகையில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்; வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு.

4. வியாபாரிகளே! புது யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, மேலதிகாரிகளுடன் இருந்துவந்த மோதல் போக்குகள் மறையும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகள் தேடி வரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

கேது பகவான் தரும் பலன்கள்

5. ஞானகாரகனான கேது 5-ம் இடத்துக்கு வருவதால், ஞானம், பக்தி அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பூர்விகச் சொத்தில் வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவேண்டும்.

6. உத்தியோகம் அல்லது கல்வியின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரிந்துசெல்வார்கள். அவர்களின் திருமண விஷயத்தில் அவசரம் கூடாது. ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தறிந்த பிறகு செயலில் இறங்குவது அவசியம்.

7. கர்ப்பிணிப் பெண்கள் கவனம் தேவை. சிலருக்கு, உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரும். ஆழ்மனதில் எப்போதும் ஒருவித பயமும், பதற்றமும், சந்தேகமும் இருக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களுக்குப் பகை ஆகலாம்.

மேஷம்

8. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத் தொழிலில் நிலவிவந்த பனிப்போர் நீங்கும். உத்தியோகத்தில் வெகு நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வைக் கொஞ்சம் போராடி பெறவேண்டிய நிலை இருக்கும்.

9. பரிகாரம்: திருவாரூர் திருப்பாம்புரம் தலத்துக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையில், அருகிலுள்ள நவகிரக சந்நிதியில் உள்ள ராகு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். கேது பகவானின் திருவருள் கைகூட, சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வணங்குங்கள்.

துலாம்: `திடீர் யோகம், சுபகாரியம்' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 5-ம் இடத்திலும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சிக் காலத்தில், ரா... மேலும் பார்க்க

கன்னி : `நிம்மதி பிறக்கும் - 3 முக்கியப் பலன்கள்' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 6-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, சகல வகைகளிலும்... மேலும் பார்க்க

சிம்மம்: `ஓரளவு சலுகை; அதிக கவனம்' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 7-ம் இடத்திலும் கேது பகவான் ஜன்ம ராசியிலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, சிரமங்களைக் கொடுத்தாலும் இலக்கை... மேலும் பார்க்க

கடகம்: `மனம் அமைதியாகும்; கவனமாக இருக்க வேண்டிய விஷயம் எது?' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 8-ம் இடத்திலும் கேது பகவான் 2-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது மாற்றமானது, உங்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத... மேலும் பார்க்க

மிதுனம்: `சேமிப்பு உண்டு; ஆனாலும், அதீத கவனம் தேவை' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 9-ம் இடத்திலும்; கேது பகவான் 3-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியானது, சோர்ந்துபோய் இருந்த உங்கள... மேலும் பார்க்க

ரிஷபம்: `தொட்டது வெற்றி; தவிர்க்க வேண்டிய ஒரு காரியம்' - ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 10-ம் இடத்திலும் கேது பகவான் 4-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது பெயர்ச்சியானது, தளராத முயற்சிகளில் உங்களை ஈ... மேலும் பார்க்க