செய்திகள் :

மொரோக்கோவில் நோயாளி; சீனாவில் மருத்துவர் - 12,000 கிலோமீட்டர் இடைவெளியில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை!

post image

சீனாவின் ஷாங்காயில் இருந்து 12000 கி.மீ தூரத்தை கடந்து மொரோக்கோவில் ரோபோவை பயன்படுத்தி ரிமோட் புரோஸ்டேட் புற்றுநோய் அறுவை சிகிச்சையை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் செய்து முடித்துள்ளனர்.

30000 கிலோமீட்டருக்கும் அதிகமான இருவழி பரிமாற்றத்துடன் இந்த கண்டங்களுக்கிடையான அறுவை சிகிச்சை ஆனது உலகிலேயே மிக நீண்ட தொலைவில் நடைபெற்ற மனித அறுவை சிகிச்சை என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 27,000 கி.மீ பரிமாற்ற தூரத்துடன் ஷாங்காய் மற்றும் பெனினில் இடையே Toumai ரோபோவின் உதவியுடன் கடந்த அக்டோபரில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

Toumai ரோபோட் சீனாவில் தயாரிக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கான நிகழ் நேர, உயர் வரையறை இமேஜிங் மற்றும் துல்லியமான கட்டுப்பாட்டை கொண்டது. பிரான்ஸ் டாக்டர் யூனஸ் ஹலால் அறுவை சிகிச்சை முடிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டார். அதிக தூரம் என்பதால் 100 மில்லி விநாடிகளுக்கும் மேல் தாமதமாக இருந்தது. இது மொராக்கோவில் உள்ள ரோபோவின் கை மற்றும் ஷாங்காயில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணருக்கு இடையே சீரான ஒருங்கிணைப்பை வழங்கி புரோஸ்டேட் கட்டியை அகற்றி, வாஸ்குலர் நரம்பு மற்றும் சிறுநீர் குழாயில் அதிகபட்ச நீளத்தை பாதுகாக்கும் வகையில் தையல் செயல்முறையும் முடித்தது.

வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு டாக்டர் ஹலால், நிகழ் நேர வீடியோ ஊட்டம், இந்த முறை 5G தொழில்நுட்பத்திற்கு பதிலாக நிலையான பிராட்பேண்டு இணைப்பு மூலம் எளிதாக்கப்பட்டது என்றார். மேலும் அறுவை சிகிச்சைக்கான ரோபோ ஒப்பிட முடியாத நெகிழ்வுத் தன்மை, துல்லியம் மற்றும் நிலைத்தன்மையை காட்டியது. இதனால் அறுவை சிகிச்சை தெளிவாகவும், மென்மையாகவும் இருந்தது. மிக சிக்கலான, சிரமமான செயல்பாடுகளை செய்வதற்கு இந்த பண்புகள் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை ரோபாடிக்ஸ் துறையில் சீனா முன்னணியில் உள்ளது. இந்தத் துறையானது 2026 ஆம் ஆண்டில் $38.4 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோபோவை உருவாக்கும் மைக்ரோ port metpod இன் தலைவர் He chao, “தொலைதூர அறுவை சிகிச்சையை வழக்கமாக மாற்றுவது எங்கள் குறிக்கோள். இது எதிர்கால மருத்துவ சேவைகளில் மாற்றங்களை கொண்டு வரும் என நம்புகிறோம்" என கூறினார்.

இந்த முன்னேற்றங்கள் அறுவை சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி, ரோபோக்களின் உதவியுடன் கூடிய ரிமோட் அறுவை சிகிச்சைகள் மூலம் உலகின் சிறந்த மருத்துவர்களிடம் இணைக்க முடியும் என்பதை காட்டுகின்றன.

Rainy Season: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க; 10 வகையான மூலிகைத் தேநீர் - செய்முறை விளக்கம்

துளசி டீமூலிகை டீதேவையானவை: துளசி இலைகள் - 10 - 20, ஏலக்காய் - 4, சுக்கு - அரை அங்குலத்துண்டு, தேன் - 2 டீஸ்பூன், பால் - கால் கப்.செய்முறை: துளசி இலைகள், ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி, ஒரு ... மேலும் பார்க்க

`விழுப்புரம் டு அரியலூர்'- கர்ப்பிணியின் அரிய வகை ரத்த மாதிரி; ரயிலில் கொண்டு சேர்த்த இளைஞர்

சில தினங்களுக்கு முன், அரியலூரை சேர்ந்த ஹேமாவதி (27)என்ற கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்க அரியவகை ரத்தமான OH+ve ரத்தம் தேவைப்பட்டது .இந்த செய்தியானது ரத்த தானம் செய்யும் குழுக்களில்... மேலும் பார்க்க

Push-Ups: `Age is Just a Number'- 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 புஷ்அப்ஸ் எடுத்து சாதனை படைத்த பெண்

கனடாவைச் சேர்ந்த டோனா ஜீன் என்ற 59 வயதான பெண், ஒரு மணி நேரத்தில் 1575 முறை புஷ்அப்ஸ் (Push-Ups) எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே ஒரு மணி நேரத்தில் அதிக முறை புஷ்அப்ஸ் எடுத்த பெண் என்ற... மேலும் பார்க்க

Hande Hospital: மைக்ரோவேவ் அபிலேஷன் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை மையத்தின் திறப்பு விழா

நவம்பர் 28, 2024-ல் மருத்துவம் மற்றும் பொது சேவையில் முன்னோடியான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களின் 98வது பிறந்த நாள், ஹண்டே மருத்துவமனை ஷெனாய் நகர், 44, லட்சுமி டாக்கீஸ் ரோடு, சென்னை – 600030-ல் கொண்டாட... மேலும் பார்க்க

அதென்ன நவபாஷாணம்; அது கொடிய வியாதிகளையும் சரி செய்யுமா? - சித்த மருத்துவர் விளக்கம்

குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் நவபாஷாண தண்டாயுதபாணி கோயிலில், நவபாஷாணத்தாலான முருகன் சிலை இருக்கிறது. இந்த சிலை சுரண்டப்பட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகாரளிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக மூக்கில் தங்கியிருந்த பகடை; அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!

வடக்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியைச் சேர்ந்தவர் சியோமா என்ற 23 வயது இளைஞர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியான தும்மல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனை அடுத்து அவர் மர... மேலும் பார்க்க