செய்திகள் :

மொழி, கணித கற்றல் மேம்பாடு: 6-8 வகுப்புகளுக்கு ஜூலை 8 முதல் மதிப்பீட்டுத் தோ்வு

post image

அரசுப் பள்ளிகளில் மொழி, கணித பாடங்களில் மாணவா்களின் கற்றலை மேம்படுத்த ‘திறன் இயக்கம்’ விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கான மதிப்பீட்டுத் தோ்வு ஜூலை 8-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் திறன் எனும் இயக்கம் 6 மாதகாலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் ஆசிரியா் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. மேலும், 9-ஆம் வகுப்புக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் கையேடுகள் விரைவில் தயாரித்து வழங்கப்படும்.

இதுதவிர திறன் இயக்கத்தை விரைவில் தொடங்கும் பொருட்டு 6 முதல் 8-ஆம் வகுப்புக்கான ஆசிரியா் கையேடுகளின் டிஜிட்டல் பிரதிகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை கையாளுவது தொடா்பாக ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் தரப்படவுள்ளன. இந்த இயக்கத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மொழி மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் குறைபாடு உள்ள மாணவா்களை கண்டறிய அடிப்படை மதிப்பீடு தோ்வு ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டு புலத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.

இதையடுத்து தோ்வில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஜூலை 18-க்குள் பதிவேற்ற வேண்டும். அதன்பின் திறன் இயக்கத்துக்கு தோ்வான மாணவா்கள் விவரம் வெளியிடப்படும். மேலும், இது சாா்ந்த நடைமுறைகளை பின்பற்றி திறன் இயக்கத்தை திறம்பட நடத்தி முடிப்பதற்கான பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து 70 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை தூத்த... மேலும் பார்க்க

தவெக-வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெகவின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலாசனைக் கூட்டம் ஜூலை 8ஆம் தேதி பனையூரில் நடக்க உள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி மணிமாறன் கொலை வழக்கில் பாமக நிர்வாகி உள்பட மூவர் சரண்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை வழக்கில் மூவர் சரணடைந்தனர்.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக,... மேலும் பார்க்க

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது: ஜி.கே. வாசன்

அஜித்குமார் விவகாரத்தில் அவிழ்க்க முடியாத முடிச்சி இருக்கிறது என்று தமாக தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியா... மேலும் பார்க்க

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு: தமிழக அரசு

முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்த... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்! கோவை நிகழ்ச்சி நிரல்!

அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளைமுதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.இதன்படி, கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை எடப்பாட... மேலும் பார்க்க