செய்திகள் :

மோகன்லாலுக்கு வில்லனாகும் வாய்ப்பை மறுத்த ஜீவா!

post image

நடிகர் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஜீவா மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப்படங்கள் அமையவில்லை. இவர் நடித்த பிளாக் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: ஓடிடியில் சங்கராந்திகி வஸ்துனம்!

ஆனால், தற்போது பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடித்த அகத்தியன் விமர்சன ரீதியாகவே எதிர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளதால் இப்படம் தோல்வியடையும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ஜீவா, “நிறைய இயக்குநர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். முக்கியமாக, மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி அழைத்திருந்தார். ஆனால், பாதி மொட்டை அடிக்க வேண்டும் என சொன்னதால் வேண்டாம் என விலகினேன்” என்றார்.

மோகன்லால் - ஜீவா இணைந்து அரண் என்கிற ராணுவ பின்னணி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் மேடையைக் கலக்கிய அனோரா! என்ன கதை?

அனோரா திரைப்படம் ஆஸ்கர் விருது விழாவில் 5 விருதுகளைப் வென்று கவனம் ஈர்த்துள்ளது.2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி அரங்கில் கோலாகலமாக நடைபெ... மேலும் பார்க்க

கேங்கர்ஸ் வெளியீட்டுத் தேதி!

நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் கேங்கர்ஸ் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கிவரும் திரைப்படம் கேங்கர்ஸ். முழுநீள நகைச்சுவைத... மேலும் பார்க்க

நடிகர் ஜெய்யின் புதிய படம்!

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை... மேலும் பார்க்க

நினைத்தாலே இனிக்கும் தொடரில் சின்ன மருமகள் நாயகி!

சின்ன மருமகள் தொடரில் நடித்துவரும் நடிகை ஸ்வேதா நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிக்கவுள்ளார். சின்ன மருமகள் தொடரின் நாயகியான இவர், நினைத்தாலே இனிக்கும் தொடரின் ரசிகர்களுக்காக சிறப்புத் தோற்றத்தில் நடிக... மேலும் பார்க்க

விரைவில் முடிகிறது ஜனனி அசோக்குமாரின் தொடர்!

நடிகை ஜனனி அசோக்குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் இதயம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது. மேலும் பார்க்க

ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்: அனோரா இயக்குநர்

ஆஸ்கர் விருதுபெற்ற அனோரா படத்தின் இயக்குநர் தன் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின... மேலும் பார்க்க