செய்திகள் :

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

post image

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை நடந்தபோது முதல்வராக இருந்த பைரன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மணிப்பூர் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். இந்த தருணம் மணிப்பூரில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று என்று மணிப்பூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மணிப்பூர் வரும் நாள்களில் பாதுகாப்பானதாகவும் வலிமையானதாகவும் வளமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் எதிர்நோக்குகிறோம்" என்று கூறியுள்ளார்.

மணிப்பூரில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சியை மேலும் மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Former Manipur CM Biren Singh says Will lead us to peace lasting progress on PM Modi Manipur visit

இதையும் படிக்க | பிரதமர்களின் மரபு இதுவல்ல; மோடி முன்பே மணிப்பூர் சென்றிருக்க வேண்டும்! - பிரியங்கா காந்தி

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: நேற்று தில்லி நீதிமன்றம்; இன்று தாஜ் ஹோட்டல்!

தில்லியில் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. அந்த வகையில் நேற்று தில்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மூத்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் சரண்!

சிபிஐ மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் பொதுலா பத்மாவதி தெலங்கானா காவல்துறையிடம் சரணடைந்தார். மறைந்த மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஷ்வர் ராவ் என்கிற கிஷன்ஜியின் மனைவி பத்மாவதி (62) என்ற சுஜாதா சி... மேலும் பார்க்க

மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக மேகாலயா முன்னாள் முதல்வர் டி.டி. லபாங் வெள்ளிக்கிழமை காலமானார். மூத்த அரசியல் தலைவரும், மேகாலயா முன்னாள் முதல்வருமான டி.டி. லபாங்(93) நீண்ட காலமாக வயது தொடர்பான நோய்களால் பாதிக... மேலும் பார்க்க

மோடி வருகை: மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

மணிப்பூரில் பிரதமர் மோடியின் வருகைக்கு இடையே, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் இன மோதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று(சனிக்கிழமை) மணிப்பூர் சென்றுள்ளா... மேலும் பார்க்க

பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தைப் புரட்டிபோட்ட பருவமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பலி எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கியதில் ... மேலும் பார்க்க

நொய்டா: கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், மகன் பலி

நொய்டாவில் கட்டடத்தின் 13-வது மாடியில் இருந்து விழுந்த தாய், அவரது 12 வயது மகன் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகரில் உள்ள கட்டடத்தின் 13வது மாடியில் வசித்து வருபவர் சாக்ஷி சாவ்லா (38). ... மேலும் பார்க்க