பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸி. அறிவிப்பு!
மோடியும் ராகுலும் மக்களை பிரச்னைகளிலிருந்து திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள்: பிரசாந்த் கிஷோர்
மோடியும் ராகுலும் உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதில் கெட்டிக்காரர்கள் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பிகாரில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ள அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வகையில், பிகார் முன்னாள் துணை முதல்வரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்கிய அரசியல் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் தாயாரை குறிவைத்து சர்ச்சைகுரிய கருத்துகள் பரவலாக பேசப்பட்டதாக பாஜக விடியோ வெளியிட்டு குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இதனைக் குறிப்பிட்டு பிகார் தலைநகர் பாட்னாவில் பேசிய ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், “ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவும் பிரதமர் மோடியை ஆட்சேபணைக்குரிய விதத்தில் பேசுவார்கள். அதேபோல, பிரதமர் மோடியும் பாஜகவும் திரும்ப இவர்களை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவார்கள். இதன்மூலம், மக்களின் கவனம் உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பப்படுகிறது” என்றார்.