செய்திகள் :

மோடி பாணியில் சந்திரபாபு: டிசிஎஸ் நிறுவனத்துக்கு 99 பைசாவுக்கு 21 ஏக்கர் நிலம்! செம ஐடியா!!

post image

துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தை, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாற்றுவதற்கான முதற்கட்டமாக, டிசிஎஸ் நிறுவனத்துக்கு 21.16 ஏக்கர் நிலத்தை அடையாளத் தொகையாக வெறும் 99 பைசாவுக்குக் கொடுத்திருக்கிறது ஆந்திர அரசு.

இது தொடர்பாக, ஆந்திர அரசு அதிகாரிகளுக்கும் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திர அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கத் தேவையான நிலத்தை 99 பைசாவுக்குக் கொடுத்த திட்டத்தை பின்பற்றி, தற்போது ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்னும் 90 நாள்களுக்குள் விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது வேலையைத் தொடங்கும் என்றும், முதற்கட்டமாக, வாடகைக் கட்டடத்தில் நிறுவனம் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் டிசிஎஸ் புதிய கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் என்றும், இங்கு 10 ஆயிரம் ஊழியர்கள் தங்குவதற்கான வீடுகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் இந்தக் கட்டுமானப் பணிகள் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

துறைமுக நகரமாக இருக்கும் விசாகப்பட்டினத்தில், டிசிஎஸ் நிறுவனம் தொடங்கப்படுவதையடுத்து, அங்குப் படிப்படியாக தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, தகவல்தொழில்நுட்ப நகரமாக மாறுவதற்கான அடித்தளம் இடப்பட்டிருப்பதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் தகவல்தொழில்நுட்பத்தில சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதர தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் தங்களது நிறுவனங்களின் கிளைகளைஅமைப்பது தொடர்பாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேசம்: ஹிந்து சமூக ஆா்வலா் கடத்திக் கொலை

வங்கதேசத்தின் தினாஜ்பூா் மாவட்டத்தில் ஹிந்து சமூக ஆா்வலா் ஒருவா் வீட்டில் இருந்து கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. கொலை செய்யப்பட்ட பாபேஷ் சந்திர ராய் (58) ஹிந்து... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆா்சி குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆா்சி) குழு வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது. மேலும், இதுபோன்ற தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தவிா்த்த... மேலும் பார்க்க

இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங்கிரஸ் கேள்வி

அமெரிக்காவில் இந்திய மாணவா்களின் விசா (நுழைவு இசைவு) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ... மேலும் பார்க்க

பெற்றோா் விவாக ரத்து: குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம்

‘கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. விவாகரத்து ஆன இந்திய மனைவியிடமிருந்து கு... மேலும் பார்க்க

இபிஎஃப்ஓ சேவைகளை மேம்படுத்த புதிய ஐடி மென்பொருள்: மே-ஜூனில் அறிமுகம்: மத்திய அமைச்சா் மாண்டவியா

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சேவைகளை மேம்படுத்த மே அல்லது ஜூன் மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப (ஐடி) மென்பொருள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்... மேலும் பார்க்க