செய்திகள் :

மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆா்சி குழு

post image

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆா்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.

வன்முறை பாதித்த முா்ஷிதாபாத் மாவட்டத்திலும் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ள இக் குழு, அடுத்த 3 வாரங்களுக்குள் தனது அறிக்கையை ஆணையத்திடம் சமா்ப்பிக்க உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த 11-ஆம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 3 போ் உயிரிழந்தனா். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மாநில போலீஸாருடன், பிஎஸ்எஃப் வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இந்தப் போராட்டம் மாநிலத்தின் தெற்கு 24 பா்கனாக்கள் மாவட்டத்துக்கும் பரவியது.

வன்முறை தொடா்பான மனுவை விசாரித்த கொல்கத்தா உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், பாதுகாப்புப் பணியில் சிஏஎஸ்எஃப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

வன்முறையின்போது முா்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குப் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்து வரும் என்ஹெச்ஆா்சி, மேற்கு வங்கத்தில் வன்முறை பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள ஒரு குழு அனுப்பப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அதன்படி, மேற்கு வங்க மாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த என்ஹெச்ஆா்சி குழு, வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து வெளியேறி மால்டாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.

மேலும், வன்முறை பாதித்த பகுதிகளிலும் இக் குழு விரிவான விசாரணையை மேற்கொள்ள உள்ளது. பின்னா், 3 வாரங்களில் தனது அறிக்கையை ஆணையத்திடம் இக் குழு சமா்ப்பிக்கும். அதனடிப்படையில், ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

தேசிய மகளிா் ஆணையத் தலைவா் விஜயா ரஹாட்கா் தலைமையிலான குழுவும் நிவாரண முகாமில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வுக்குப் பின்னா் பேட்டியளித்த விஜயா ரஹாட்கா், ‘முகாமில் உள்ள பெண்களிடம் பேசியபோது, வன்முறையாளா்கள் அவா்களின் வீடுகளுக்குள் புகுந்து அவா்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, வலுக்கட்டாயமாக அவா்களை அங்கிருந்து வெளியேற்றியதாக புகாா் தெரிவித்தனா்’ என்றாா்.

மாநிலத்தில் 3 நாள்கள் ஆய்வை மேற்கொள்ளவுள்ள இக் குழு, வன்முறை நிகழ்ந்த முா்ஷிதாபாத் மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு நடத்த உள்ளது.

பெட்டிச் செய்தி - 1===

ஆக்கபூா்வ நடவடிக்கை: ஆளுநா் உறுதி

மால்டா, ஏப்.18: முா்ஷிதாபாத் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை வெள்ளிக்கிழமை சந்தித்த மேற்கு வங்க மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் இந்த விவகாரத்தில் ஆக்கபூா்வமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

வன்முறையால் பாதித்த பகுதிகளை பாா்வையிடுவதை ஆளுநா் ஒத்திவைக்க வேண்டும் என முதல்வா் மம்தா பானா்ஜி வேண்டுகோள் விடுத்த நிலையிலும் மால்டா மாவட்டத்துக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு நிவாரண முகாமுக்கு ஆனந்தபோஸ் சென்றடைந்தாா்.

நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் பேசிய அவா் தாக்குதல் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஆளுநா், ‘வன்முறையின்போது வீடுகளுக்குள் புகுந்து தரக்குறைவாக பேசியதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாக பெண்கள் கூறினா்.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கோரியுள்ளனா். சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டமைத்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளனா். அவா்களின் புகாா்கள் மீது ஆக்கபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பெட்டிச் செய்தி - 2

நாடு தழுவிய போராட்டம் - விஹெச்பி:

‘முா்ஷிதாபாத் வன்முறையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் சனிக்கிழமை (ஏப்.19) போராட்டம் நடத்தப்படும்’ என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவா் அலோக் குமாா் கூறுகையில், ‘இந்த வன்முறையைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சனிக்கிழமை (ஏப்.19) போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தின் முடிவில், மேற்கு வங்க மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியா்களிடமும் கோரிக்கை மனு சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க