பாரதிராஜா: `கம்பீரம் குறையாம, நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்’ - நேரில் சந்தித்...
'மோன்தா' புயல் உருவாகியது; சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; வேறு எந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்?
'மோன்தா' புயல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.
அதன் படி,
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று மோன்தா புயலாக மாறியுள்ளது.
இந்தப் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கே, வடமேற்கே நகர்ந்து நாளை காலை கடும் புயலாக வலுப்பெறும்.
இதையடுத்து, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் காக்கிநாடா - மசிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்.

நேற்றைய சென்னை வானிலை மையத்தின் அறிக்கை படி,
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.
நாளை...
திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.


















