சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு
மௌனத்தைக் கலைக்கிறேன் என் குழந்தைகளுக்காக... ஆர்த்தி ரவியின் பதிவு!
நடிகர் ரவி மோகன் கெனிஷாவுடன் நிகழ்வுக்கு ஒன்றாகச் சென்ற பின்னர் அவரது மனைவி ஆர்த்தி ரவி அவர் தரப்பு நியாயங்களை நீண்ட பதிவின் மூலமாகப் பகிர்ந்துள்ளார்.
ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் ரவி பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு மீண்டும் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தார். அந்த வழக்கு இன்னும் முடியவில்லை. மேலும் அவர் தனது பெயரை ரவி மோகன் எனவும் மாற்றினார்.
பாடகி கெனிஷாவுடன் காதல் என்ற வதந்திகளுக்கு இருவருமே மறுப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (மே.9) திருமண நிகழ்வில் இருவரும் ஒன்றாகச் சென்றிருந்தது சர்ச்சையானது.
இது குறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது:
என் மௌனத்தைக் கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக...
கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன். இதற்குக் காரணம் நான்பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சைவிட என் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம்எனக்கருதியதால் தான் அந்த விரதம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என்குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரைதேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான்.
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும்வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாகசென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான்காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒருமனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில்இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார். பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என்தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும்அறியாமல் அந்தக்குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என்கைகள் தான் துடைத்துக் கொண்டிருக்கிறது.
இன்று அவர்புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுதுவெறும் செங்கல்சுவர் போல அவர் கண்களுக்குகாட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும்அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசைபிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்னவென்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்தநிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்குபோட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்றுநான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன்.
இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான்தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது. அவர்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பும், உறுதியும் மிக முக்கியம். இன்று நடந்து கொண்டிருக்கும் சட்டவிவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலிசமாதான வாக்குறுதிகள் இவை அனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கின்றன.
இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்கநினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்யதவறினால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும். இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக் கொள்ளலாம், உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு.
இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்து தான் ஆக வேண்டும். எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலன்விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக்கொள்பவர்களுக்கும் ஒன்று, இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்திரவி என்ற பெயரில்தான் உள்ளது. சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயே நீடிக்கும். அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம். அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்பொழுதும் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான் பேசவில்லை. என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன். இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இரு மகன்களுக்காக கதறல்களை, கசப்பான அனுபவங்களை மறைத்துக்கொண்டு மேலும் மேலும் உயர்ந்து எழுகிறேன் எனக் கூறியுள்ளார்.