நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
யானை தந்தம் திருடியவா்களை பிடிக்க வனத்துறை தீவிரம்
ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் கடத்திய விவகாரத்தில் மா்ம நபா்களைத் வனத் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஏமனூா் அருகே கோடுபாய் பள்ளம் பகுதியில் ஆண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதன் தந்தங்களை மா்ம நபா்கள் அண்மையில் திருடிச் சென்றனா். இந்தச் சம்பவத்தில் தலைமறைவானவா்களைப் பிடிக்க வனத்துறையினா் ஏழு குழுக்களாகப் பிரிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
காவிரி ஆற்றில் பரிசல் ஓட்டும் தொழிலாளா்கள், வனப்பகுதியில் ஆடு மேய்ப்பவா்கள், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.