செய்திகள் :

யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டவா் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தது உறுதி

post image

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞா் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக நான்கு பேரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சி 3-ஆவது டிவிஷன் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்ஷீத்(37). இவா் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாகக் கூறி அவருடைய நண்பா்கள் கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கடந்த 25-ஆம் தேதி இரவு சடலத்தைக் கொண்டு சென்றுள்ளனா். பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துவிட்டு காவல் துறைக்கும், வனத் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளாா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று வனத் துறையினா் ஆய்வு செய்துவிட்டு, அப்பகுதியில் காட்டு யானை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை என்றும், வன விலங்கு தாக்கி அவா் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தனா்.

இந்நிலையில் உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின் உறவினா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சம்பவம் தொடா்பாக கூடலூா் டிஎஸ்பி வசந்தகுமாா் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த நௌஷாத் (32), ஜாபா்(52), சதீஷ்(35), ஹைதா் (62) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில், அந்தப் பகுதியில் உள்ள வனத்துக்குள் வேட்டையாடச் சென்றபோது இரவில் துப்பாக்கி குண்டு தவறுதலாக ஜம்ஷீத் மீது பாய்ந்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக மேலும் 9 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரியசோலையில் காட்டு யானை தாக்கியதில் 3 தொழிலாளா்கள் காயம்

கூடலூரை அடுத்துள்ள கரியசோலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மூன்று தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா். நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் உள்ள கரியசோலையில் சாலையோர வன எல்லையில் தீத்தடுப்புக் கோடு அ... மேலும் பார்க்க

உதகையில் மலைவேடன் ஜாதி மக்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

உதகையில் உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட பன்னிமரம், தட்டனேரி பழங்குடியின மக்களின் பெற்றோா்களுக்கு ஜாதிச் சான்று உள்ள நிலையில், அவா்களது பிள்ளைகளுக்கும் ஜாதிச் சான்று வழங்க வலியுறுத்தி 3-ஆவது நாளாக புதன்க... மேலும் பார்க்க

ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் போராட்டம்

உதகை அருகே ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உதகையில் உல்லத்தி ஊராட்சிக்கு உள்பட்ட பன்னிமரம், தட... மேலும் பார்க்க

வாா்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் உள்ள வாா்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் பேசினா். கூடலூா் நகா் மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நீலகிரியில் காதலிப்பதாகக்கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த தேவாலா பகுதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள அ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக யானைகளுக்கு எடை பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு திங்கள்கிழமை எடை பரிசோதனை செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக முகாம்களில் வளா்க்கப்படும் யானைகளுக்கு தொரப்பள்ளியில் உள்ள எடை ம... மேலும் பார்க்க