`யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை' - விஜய் குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜியின் பதில்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஆர்எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் தொடங்கும். இது ஹாக்கி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
அவர்களின் கோரிக்கையை முதல்வரும், விளையாட்டுத் துறையை நிர்வகிக்கும் துணை முதல்வரும் செயல்படுத்தியுள்ளனர். இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக மாற்றும் அளவுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
செயற்கை புள்வெளியுடன் அமையவுள்ள இந்த மைதானத்தை 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கோவை மாநகராட்சியில் ரூ.935 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவில் தொடங்கப்படும். கடந்த ஆட்சியில் சாலைகள் போடாததால் தான் சில பகுதிகளில் மோசமாக இருக்கிறது.” என்றார்.
விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. யாரையும் குறைவாக சொல்லவில்லை.
அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்பதை தவிர்க்க பாருங்கள். அரசியல் கூட்டங்களில் அதைக் கேளுங்கள்.” என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...