செய்திகள் :

யூத மதகுருவைக் கொலை செய்த 3 பேருக்கு மரண தண்டனை!

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் யூத மதகுருவின் கொலை வழக்கில் கைதான 3 உஸ்பெகிஸ்தான் நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மால்டோவா மற்றும் இஸ்ரேல் நாட்டு குடியுரிமைப் பெற்றவர் ஸ்வி கோகன் (வயது 28) , இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர யூத அமைப்பான சாபாத் ஹஸிதிக் இயக்கத்தின் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2024 நவம்பர் 21 அன்று மாயமானதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையினரிடம் புகாரளித்த நிலையில் நவ.24 அன்று அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவரது கொலையில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் அமீரகத்திலிருந்து துருக்கி நாட்டிற்கு தப்பி சென்றனர். பின்னர், அமீரக அதிகாரிகளின் கோரிக்கையின் படி அவர்கள் 4 பேரையும் கைது செய்த துருக்கி அதிகாரிகள் மீண்டும் அமீரகத்துக்கு நாடு கடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கானது கடந்த ஜனவரி மாதம் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டினர் கோகனை பின் தொடர்ந்து அவரை கடத்தி கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து, சேகரிக்கப்பட்ட தடயவியல் ஆதாரங்கள், கொலையாளிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் அபுதாபி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தீவிரவாத நோக்கங்களுடன் இந்தக் கொலை அரங்கேறியுள்ளதாகக் கூறிய அபுதாபி நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் கடந்த மார்ச் 31 அன்று மரண தண்டனையும் அவர்களுக்கு உதவிய 4-வது நபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இருப்பினும், ஐக்கிய அமீரகத்தின் சட்டத்தின் கீழ், ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அந்த வழக்கானது தானாகவே மேல்முறையீடு செய்யப்பட்டு மறுஆய்வுக்காக கூட்டாட்சி உச்ச் நீதிமன்றத்தின் குற்றவியல் பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, இந்த வழக்கும் மேல் முறையீடு செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிக்க:பாகிஸ்தான்: ரமலான் விடுமுறையினால் அகதிகளை நாடு கடத்துவதில் தாமதம்!

ஜார்க்கண்ட்: பள்ளிக்கூடத்தில் மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது மின்னல் பாய்ந்து 9 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.கோடெர்மா மாவட்டத்தின் லால்காபானி கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இன்று (ஏப்.9) மதியம் வகுப்பு ... மேலும் பார்க்க

காஸாவில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 23 பேர் பலி!

காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஸாவின் ஷிஜாயா பகுதியிலுள்ள 4... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தீவிரவாதிகளைச் சுட்டுக்கொல்லும் மர்ம நபர்கள்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் தீவிரவாதியின் கூட்டாளி ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.சர்வதேச அளவில் தீவிரவாதியென அறிவிக்கப்பட்டவரும் ஜெய்ஷ்-எ-முஹம்மது எனும் தீவி... மேலும் பார்க்க

தண்ணீர் பிரச்னையால் பிரிந்து சென்ற மனைவி! கணவனின் புகாரால் நிர்வாகம் நடவடிக்கை!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினால் மனைவி பிரிந்து செல்லவே அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.திண்டோரியின் தேவ்ரா கிராமத்தை... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம்! அதிபர் அறிவிப்பு!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான காஸா மீதான போரில் ஆயிரக்கணக்... மேலும் பார்க்க

இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்க... மேலும் பார்க்க