யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை
ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!
ரஜினி - கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்த், “நான் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதில், நானும் ரஜினியும் நடிக்கிறோம். ஆனால், இப்படத்தின் இயக்குநர், கதை, கதாபாத்திரம் குறித்து எதுவும் முடிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் ரஜினி - கமல் திரைப்படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவித்தன.
ஆனால், ரஜினி இயக்குநர் உறுதி செய்யப்படவில்லை எனப் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, கூலி படத்தின் தோல்வியால் வேறு இயக்குநரை மாற்றும் திட்டத்தில் கமல் ஹாசன் இருக்கலாம் என்றும் தெரிகிறது.
இதையும் படிக்க: பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!