செய்திகள் :

ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

post image

பலூசிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவா் நகருக்கு 9 பெட்டிகள்,400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஜாஃபா் விரைவு ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 21 பயணிகள், 4 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர் ரயிலை கடத்திய அனைத்து தீவிரவாதிகளையும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இதனைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய் (மார்ச். 11) அன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கானிடம் ரயில் கடத்தல் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஷஃப்கத் அலி கான், ”ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை திட்டமிட்டனர். அவர்களுடன் பயங்கரவாதிகள் நேரடித் தொடர்பில் இருந்தனர்.

பலூசிஸ்தான் அமைப்பினரைப் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்குமாறு ஆப்கானிஸ்தானிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.

"இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள், அதற்கு நிதியுதவி அளிப்பவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசுடன் ஒத்துழைக்குமாறு ஆப்கானிஸ்தானை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பலூசிஸ்தான் அமைப்பினரின் முந்தைய தாக்குதல்களில் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் தற்போது ஆப்கன் மீது குற்றம் சாட்டியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

"எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் அந்த உண்மைகள் மாறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது," என்று அவர் குற்றம் சாட்டினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த போது, ”இந்தியா தனது அண்டை நாடுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் உலகளவிலான படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றது” என்றும் அவர் கூறினார்.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்.

பாகிஸ்தான் மற்றவர்களின் மீது பழி சுமத்துவதற்கு முன்பு உலகளாவிய பயங்கரவாத மையம் எங்கே உள்ளது என்பது முழு உலகிற்கும் தெரியும்” என்றார்.

பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு பிரச்சினைகள், தோல்விகளுக்காக மற்றவர்கள் மீது பழியை சுமத்துவதற்குப் பதிலாக, தங்கள் நாட்டின் உள்ளே முதலில் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சர்

ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் யாதவ் எழுப்பிய கேள்விக்கு வரு... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!

கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள... மேலும் பார்க்க

கேரள பாஜக தலைவரானார் ராஜீவ் சந்திரசேகர்!

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய பாஜக மாநிலத் தலைவா் கே. சுரேந்திரன் தனது ஐந்து ஆண்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏவைத் தாக்க முயற்சி! பேரவை துணைத் தலைவர் மீது தாக்குதல்!

அஸ்ஸாம் சட்டப்பேரவை துணைத் தலைவரை காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை சுயேச்சை உறுப்பினரை பாஜக எம்எல்ஏ தாக்க முயற்சி செய்ததாக கு... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கல்: தில்லி உயர் நீதிமன்றம்

வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவு உடனட... மேலும் பார்க்க

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவராகப் பதவியேற்றார் உமேஷ் குமார்!

அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி உமேஷ் குமார் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார். தில்லி மின்சாரத்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் தில்லி செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் உமே... மேலும் பார்க்க