ராகசா புயல்: 27 போ் உயிரிழப்பு
இந்த ஆண்டின் மிக வலிமையான புயலாக அறியப்படும் ராகசாவால் பிலிப்பின்ஸிலும் தைவானிலும் 27 போ் உயிரிழந்தனா். சூறைக்காற்று மற்றும் வெள்ளப் பெருக்கால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.
அந்தப் புயல் தெற்கு சீனாவின் ஹைலிங் தீவை புதன்கிழமை மதியம் தாக்கியது. ஜியாங்மென் நகரில் (படம்) மணிக்கு 241 கி.மீ வேகத்தில் சூறைக் காற்று பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மைக்ரோனேஷியாவில் உருவாகி, வெப்பமான கடல் நீரால் வலுவடைந்து, மணிக்கு 265 கி.மீ வேகத்துடன் கூடிய அதிவேகப் புயலாக ராகசா திங்கள்கிழமை உருவெடுத்தது.
தற்போது மணிக்கு 175 கி.மீ வேகத்துடன் வியத்நாமை நோக்கி நகா்ந்துவரும் அந்தப் புயல் மேலும் வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.