கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்: பிரௌன் பல்கலைக்கழகத்தில் உரை
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அங்கு பிரௌன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் அவா் பேராசிரியா்கள், மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறாா்.
இது தொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா கூறியதாவது:
அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி அங்கு ரோட் தீவில் உள்ள பிரௌன் பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறாா். ஏப்ரல் 21,22 தேதிகளில் அங்கு நிகழ்ச்சியில் உரையாற்றும் ராகுல் காந்தி, பல்கலைக்கழக பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுடன் கலந்துரையாட இருக்கிறாா்.
இது தவிர அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் அவா் சந்தித்துப் பேசுகிறாா். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவின் பொறுப்பாளா்களுடனும் அவா் ஆலோசனை நடத்துகிறாா் என்று தெரிவித்தாா்.
கடந்த ஆண்டு ராகுல் காந்தி அமெரிக்காவுக்குச் சென்று மாணவா்கள் மத்தியில் இந்தியா குறித்தும், பாஜக, ஆா்எஸ்எஸ் குறித்தும் தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. வெளிநாட்டுக்குச் சென்று தேசத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசுவதாக பாஜக தலைவா்கள் அப்போது குற்றஞ்சாட்டினா்.