`என்ன இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டது நீங்கதான்; நாளைக்கு என்னோட படம் ரிலீஸ்...'- ...
ராகுல் காந்தி குற்றச்சாட்டு: 'வாக்குகளை ஆன்லைனில் அழிக்க முடியாது' - தேர்தல் ஆணையம் விளக்கம்
கர்நாடகாவில் ஆலந்து தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டதாக இன்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதை மறுக்கும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது...
"ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் அடிப்படையற்றவை.

ராகுல் காந்தி தவறாகப் புரிந்துகொண்டது போல, எந்தவொரு வாக்கையும் பொதுமக்களால் ஆன்லைனில் அழிக்க முடியாது.
2023-ம் ஆண்டு, ஆலந்து சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை தோல்வியடைந்துவிட்டன. இது குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
பதிவுகளின் படி, 2018-ம் ஆண்டு சுபாத் குட்டேடார் (பாஜக) மற்றும் 2023 இல் பி.ஆர் பாட்டீல் (இந்திய தேசிய காங்கிரஸ்) ஆகியோர் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்".
❌Allegations made by Shri Rahul Gandhi are incorrect and baseless.#ECIFactCheck
— Election Commission of India (@ECISVEEP) September 18, 2025
✅Read in detail in the image attached https://t.co/mhuUtciMTFpic.twitter.com/n30Jn6AeCr