செய்திகள் :

ராகுல் காந்தி தள்ளியதால் தலையில் காயம்: பாஜக எம்பி

post image

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் தனது தலையில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி வியாழக்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமித் ஷா பேசியபோது அம்பேத்கரை அவமதித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும், அமித் ஷா பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பேரணி நடைபெற்றது.

அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.

இது தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜகவின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்து தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ராகுல் காந்தி ஒரு தள்ளிய எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார்.

இதையும் படிக்க : நாடாளுமன்ற வாயில் சுவரில் ஏறி எம்பிக்கள் போராட்டம்!

இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:

”உங்கள் கேமிராக்களிலேயே இது பதிவாகியிருக்கும். நான் நாடாளுமன்ற வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். பாஜக எம்பிக்கள் என்னை மறித்து தள்ளினார்கள், மிரட்டல் விடுத்தார்கள். அதனால் இது நடந்தது.

தள்ளுமுள்ளு நடந்தது உண்மைதான். இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் பாதிப்படைய மாட்டோம். ஆனால், இது நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உண்டு. அரசியலமைப்பை தாக்குவதும் அம்பேத்கரை அவமதிப்பதுமே முக்கிய பிரச்னை” என்றார்.

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல்: காங்கிரஸ் புகார்!

ராகுல் காந்தி மீது 3 பாஜக எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்க... மேலும் பார்க்க

ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு

மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.மாநிலங்களவையி... மேலும் பார்க்க

ஜனநாயகத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை: ஒடிசா முதல்வர்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பொறுப்பற்ற, ஆட்சேபனையற்ற நடத்தையால் பாஜகவின் எம்பி காயமடைந்துள்ளதாக ஒடிசா முதல்வர் சரண் மாஜீ தெரிவித்தார். இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் கூறுகையில்,நாடாளுமன்றத்தில் இன்... மேலும் பார்க்க

மொத்த வருமானமே ரூ.3.5 கோடி, ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் மதிப்போ ரூ.9.6 கோடி!

பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ் தற்போது அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். இவர் தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பிகார் மாநிலம் பாட்ன... மேலும் பார்க்க

ராகுலுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தீர்மானம் கொண்டு வந்தார்.நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும்... மேலும் பார்க்க

பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம்: கார்கே புகார்!

பாஜக எம்.பி.க்கள் தள்ளியதால் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கடிதம் அளித்துள்ளார்.மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை ப... மேலும் பார்க்க