செய்திகள் :

ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு!

post image

அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.

இது தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜகவின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி மீது பாஜக தரப்பில் எம்பிக்கள் குழு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி மீது நாடாளுமன்ற தெரு காவல்நிலையத்தில் வியாழக்கிழமை(டிச.19) முதல் தகவல் அறிக்கை பதிந்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பாஜக அரசு பயப்படுகிறது' - பிரியங்கா காந்தி

அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு பயப்படுவதாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த பாஜக அரசு ப... மேலும் பார்க்க

மக்களவை: குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.கடந்த மாதம் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை விவாதி... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பாஜக - காங்கிரஸ் கூட்டணிகள் போட்டிப் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் பாஜக கூட்டணி எம்பிக்களும், இந்தியா கூட்டணி எம்பிக்களும் வெள்ளிக்கிழமை போட்டிப் போராட்டம் நடத்தினர்.மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதிக்கும் கர... மேலும் பார்க்க

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன? அறிக்கை தாக்கல்

முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபக்குள்ளான சம்பவம் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை நிலைக்குழு வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த 2021 டிசம்பர் ... மேலும் பார்க்க

அயோத்தி போன்ற பிரச்னைகளை வேறு எங்கும் எழுப்பாதீர்கள்! ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

புணே: பல்வேறு இடங்களில் அயோத்தி போன்ற சர்ச்சைக் கருத்துகளை ஹிந்து அமைப்புத் தலைவர்கள் எழுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.புணேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே பயங்கர தீ!

ஜெய்ப்பூர் பெட்ரோல் நிலையத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலைய... மேலும் பார்க்க