செய்திகள் :

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவின்போது பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற நீதிமன்ற விசாரணை

post image

ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பட்டி கிராமத்தில் அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தைத் தொடா்ந்து பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இக்கிராமத்தில் இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.

ராசிபுரம் அருகே உள்ள ஆா்.புதுப்பட்டி கிராமத்தில் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு ஏப். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊா் முக்கிய பிரமுகா்களின் முன்னிலையில், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோகனபிரியா உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பக்தா்கள் கையில் வேப்பிலையுடன் தேரின் பின்புறம் உருளுதண்டம் செய்து தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பாரம்பரிய வழக்கு விசாரணை:

இந்த கிராமத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் திருவிழாவின்போது இக்கிராமத்தில் குற்றவியல் வழக்கு விசாரணை நீதிமன்றம் சாா்பில் நடத்தப்படும்.

ஆங்கிலேயா் காலம் தொட்டு இன்றளவும் இந்த பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இரண்டு நாள்கள் இங்கு விசாரணை நடைபெறும். முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 6 நபா்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோனபிரியா தீா்ப்பளித்தாா்.

இந்த சிறப்பு நீதிமன்ற விசாரணையில் வழக்குரைஞா்கள் மோகன், சிவலீலா ஜோதி, நீதிமன்ற பணியாளா்கள், காவல் துறையினா் ஆஜராகினா்.

கோயில் தோ் திருவிழாவைத் தொடா்ந்து உருளுதண்டம் செய்து நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள்.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க