ராஜஸ்தானில் கர்ணி மாதா கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு மேற்கொண்டார்.
பிகானேர் மாவட்டத்திற்கு வருகை தரும் மோடி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தைத் திறந்துவைக்க உள்ளார். மேலும் ரூ.26,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பலானாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 103 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'அம்ரித் நிலையங்களை' பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.