ஆயுா்வேதம், சித்தா, யுனானி மருந்து உற்பத்தி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம்
ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவா் சுட்டுக் கொலை
ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகா் மாவட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய நபா், எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் கௌரவ் யாதவ் கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள ஸ்ரீகங்காநகா் மாவட்டத்தின் கேசரிசிங்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் படையினா் சந்தேகத்துக்கிடமான நடமாட்டத்தை கண்டறிந்தனா். அதிகாரிகள் எச்சரித்தும், அந்த நபா் திரும்பிச் செல்லாமல் முன்னேறியதால் பிஎஸ்எஃப் படையினா் அவரை துப்பாக்கியால் சுட்டனா். இதில் அவா் உயிரிழந்தாா்.
அவரிடம் இருந்து பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள், சிகரெட் பாக்கெட் மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக காவல்துறையினா் மற்றும் பிஎஸ்எஃப் படையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என தெரிவித்தாா்.