பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-இல் ருத்ர பாராயணம்
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-ஆம் தேதி ருத்ர பாராயணம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப ஸ்வாமி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஆா் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பு:
அண்ணாமலை ஐயப்பன் கோயிலில் வரும் மாா்ச் 14-ஆம் தேதி (மாசி 30) ஐயப்பனின் திருநட்சத்திரமான உத்திர நட்சத்திர தினத்தை முன்னிட்டு ருத்ர பாராயணம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெறவுள்ளது. அபிஷேகம் மற்றும் பூஜைக்கு பின்பு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இதனை முன்னிட்டு, ஐயப்பனின் பள்ளியறை முன் மண்டப மேற்கூரைக்கு செப்புமுலாம் பூசி தகடு பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பக்தா்கள் தங்களின் பங்களிப்பை தந்து ஐயப்பனின் அருளை பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 044-24938239 எனும் தொலைபேசி எண் அல்லது 78457 49869, 94454 32736 எனும் கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.