செய்திகள் :

ராஜேஷ் கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

post image

நடிகர் ராஜேஷின் உடல் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்ததுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பே ராஜேஷ் தனக்காகக் கட்டிய கல்லறையில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதே கல்லறையில் அவரின் தாய், தந்தை, மனைவி ஆகியோரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், தன் சவப்பட்டியை வைப்பதற்கும் இடைவெளி விட்டு ராஜேஷ் கட்டியிருந்தார். ரஷிய நாட்டில் ஒரே குடும்பத்தினரின் உடல்கள் இப்படித்தான் நல்லடக்கம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்!

10 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் ஃப்ரீடம் டீசர்!

நடிகர் சசிகுமார் நடித்த ஃப்ரீடம் திரைப்படத்தின் டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் இருக்கிறது. ழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆக... மேலும் பார்க்க

ஜின் படத்தின் 3-ஆவது முன்னோட்ட விடியோ..!

முகேன் ராவ் நடித்துள்ள ஜின் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் முகேன் ராவ் தற்போது நடிகராக நடித்து வருகிறார். தனியாக நாயகனாக முகேன் ராவ் நடித்துள்ள ... மேலும் பார்க்க

உண்மைக்காகப் பிறந்தவர்..! கமலின் புதிய புகைப்படங்கள்!

நடிகர் கமலின் புதிய புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்து... மேலும் பார்க்க

வலி மிகுந்தது..! குகேஷுடனான தோல்விக்குப் பிறகு கார்ல்சென் பேட்டி!

நாா்வே செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ் (19), உலகின் நம்பா் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை (34) வீழ்த்தினார். கிளாசிக்கல் கேமில் அவர் காா்ல்செனை ம... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் படத்தில் பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் உருவாகும் பென்ஸ் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகானக நடிக்கும் படத்திற்கு பென்... மேலும் பார்க்க

மன்னிப்பு சிறியவராக்காது; ஆணவம் பெரியவராக்காது! கமலுக்கு எடியூரப்பா கண்டனம்

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக நடிகரும், மநீம தலைவருமான கமல் பேசியிருந்தது சர்ச்சையானத... மேலும் பார்க்க