செய்திகள் :

ராஜேஷ்: "தேடல் உள்ள கலைஞர்... பெரும் வருத்தம்" - கமல்ஹாசன் இரங்கல்!

post image

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த ராஜேஷ் இன்று (மே 29) தன்னுடைய 75வது வயதில் மரணமடைந்துள்ளார்.

150 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் தடம் பதித்திருக்கிறார். சினிமா கடந்து ஆன்மிகத்திலும் ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் சிறந்த பேச்சாளராகவும் அறியப்படுகிறார்.

rajesh

1974-ம் ஆண்டு கே. பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 'கன்னி பருவத்திலே', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ராஜேஷின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூத்த நடிகர் கமல்ஹாசன், "தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.

தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என சமூக வலைதளங்களில் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

The Verdict Review: மிரட்டல் வரலட்சுமி, எமோஷனல் ஸ்ருதி; பரபர கோர்ட் ரூம் டிராமா வெல்கிறதா?

அமெரிக்காவில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான எலிசாவை (சுஹாசினி) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார் நம்ருதா (ஸ்ருதி ஹரிஹரன்). கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் எலிசா, நம்ர... மேலும் பார்க்க

Saregamapa: "10 லட்சத்தை வச்சு கடன அடைக்கப் போறேன்!" - டைட்டில் வின்னர் திவினேஷ் பேட்டி

‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை பலருக்கும் ஃபேவரைட்டான திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார்.திவினேஷ், சரிகமப மேடையிலேயே அதிகளவில் எதுவும் பேசமாட்டார். அப்பா... மேலும் பார்க்க

Jinn - The Pet Review: பேயைச் செல்லப் பிராணியாக வளர்க்கும் நாயகன்; ரசிக்க வைக்கிறதா ஜின்னின் கதை?

வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பும் சக்தி (முகேன் ராவ்), ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’னுடன் தன் வீட்டுக்கு வருகிறார். அது ஒரு அதிர்ஷ்டப் பேய் என்பது அவரது நம்பிக்கை. பால், பிஸ்கட்டால் ம... மேலும் பார்க்க