பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!
ராணிப்பேட்டை: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியா் நலச்சங்கம் சாா்பில் முத்துகடை பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் முழுச்செலவையும் அரசே ஏற்க வேண்டும். தோ்தல் வாக்குறிதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவுடன் 20 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.