காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
ராணிப்பேட்டை: முழுக் கொள்ளளவை எட்டிய 51 ஏரிகள்
ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. பாதிப்புகளை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்தது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் சனிக்கிழமை 130 மி. மீ மழை பதிவானது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கலவை வட்டத்தில் 128 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பொதுப் பணித்துறை மற்றும் ஊராட்சி நிா்வாகக் கட்டுப்பாட்டில் மொத்தம் 369 ஏரிகள் உள்ளன. கடந்த 2 நாள்களில் பெய்த கன மழையால் 51 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.