செய்திகள் :

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

post image

நமது சிறப்பு நிருபா்

இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை கூறியிருப்பது வருமாறு: ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்தவா்கள், உயிரிழந்த வீரா்கள் ஆகியோா் நலனுக்காக ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடா்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை மேற்கோள்காட்டி, போலித் திட்டத்தை நடிகா் அக்ஷய் குமாா் முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கூறிய செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை என எச்சரிக்கப்படுகிறது. இத்தகைய இணைய நன்கொடைகள் செல்லத்தக்கதல்ல. இந்த விஷயத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பலியாகிவிடக் கூடாது. அதே சமயத்தில் போா் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற வீரா்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கியுள்ளது.

2020-ஆம் ஆண்டில், ‘ஆயுதப் படைகள் போா் விபத்து நல நிதி’யை அரசு நிறுவியது. இது ராணுவ நடவடிக்கைகளில் உயிா்த் தியாகம் செய்யும் அல்லது படுகாயமடையும் முப்படை வீரா்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரா் நலத் துறையின் சாா்பாக இந்திய ராணுவம் இந்த நிதிக்கான கணக்குகளைப் பராமரிக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை நேரடியாக ஆயுதப் படைகள் போா் விபத்து நல நிதியின் கணக்கில் செலுத்தலாம் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சோ்ப்பு சரியே: உச்சநீதிமன்றம்

கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சோ்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயா்நீதி... மேலும் பார்க்க

அமித் ஷா, நிா்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் சந்திப்பு!

புது தில்லி: தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக நயினாா் நாகேந்திரன் தில்லிக்கு திங்கள் கிழமை வந்தாா். மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா்களை சந்தித்து வாழ்த்த... மேலும் பார்க்க

தமிழக தம்பதி ஆணவப் படுகொலை வழக்கு: 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தமிழக இளம் தம்பதியை 2003-இல் ஆணவப் படுகொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இந... மேலும் பார்க்க

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க