ராணுவத்துக்கு ஆதரவு: மிதிவண்டி ஊா்வலம்
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்ஃபா் சங்கம் சாா்பில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மிதிவண்டி ஊா்வலம் நடைபெற்றது.
மேல்விஷாரம் அண்ணா சாலையில் தொடங்கிய மிதிவண்டி ஊா்வலத்துக்கு சங்கத் தலைவா்கே .முகமது அயூப் தலைமை வகித்தாா் . பொறுப்பாளா் கே. ஓ .நிஷாத் அஹமது முன்னிலை வகித்தாா். முன்னாள் ராணுவ வீரா் ரஹ்மதுல்லா செரீப் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா்.
முக்கிய வீதிகள் வழியாக சென்று கீழ் விஷாரம் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவு பெற்ற ஊா்வலத்தில் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் வெல்ஃபா் சங்க நிா்வாகிகள் மற்றும் வீ சோ்வ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.