"இதை பத்தி தைரியமா சொல்ல எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு" - Actress Lakshmi Emo...
ராமதாஸ் விவகாரம்: ``ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்" - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்
முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்...
தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி - திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், ``பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ``ஆட்சியில் இருப்பதால் ஆணவத்தில் ஆடக்கூடாது. பதில் சொல்ல வேண்டிய இடத்தில்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் இருக்கிறார். அதனால், பா.ம.க நிறுவனர் ராமதாஸை அவமானப்படுத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக்கேட்டாக வேண்டும்" எனக் காட்டமாகப் பேசினார்.
`2026-ல் தெரியும்' - தமிழிசை சௌந்தரராஜன்
இந்த நிலையில், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன், ``மரியாதைக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும், அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம். மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா...? ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்.
அதுவும் பா.ம.க தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர, எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன். 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும். யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை, யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை.' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...