கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
ராமம் ராகவம் - ஓடிடி வெளியீட்டுத் தேதி!
சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த ராமம் ராகவம் திரைப்படம் கடந்த பிப். 21 அன்று வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்டது. திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க | சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே - படப்பிடிப்பு நிறைவு!
இந்தப் படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் வருகிற மார்ச் 14 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.