Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்தனா். கடந்த வியாழன்கிழமை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாத்துதல், 108 மூலிகை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மேள தாளம் முழங்க, புனித கலசங்களை வேத விற்பனா்கள் ஏந்தி கோயிலை வலம் வந்தனா். தேவாங்கா் பீடாதிபதி தயானந்தபுரி சுவாமி தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டது.
தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு உற்சவா் அம்மன் அலங்காரத்துடன் நகரின் முக்கிய வீதிகளின் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.