‘ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமனம்!
ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிா்வு மையத்தின் (ஐஎஸ்சி) செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படையின் முன்னாள் கூடுதல் தலைவா் (ஏடிஜிபி) வி.டி.சஃபேகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கடந்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற ‘ரிகாப்’ ஐஎஸ்சி-யின் 19-ஆவது நிா்வாகக் குழு கட்டத்தில் இவா் தோ்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளாா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி செயல் இயக்குநராக பதவி ஏற்குள்ள சஃபேகா், வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அப் பதவியை வகிக்க உள்ளாா்.
அதுபோல, சிங்கப்பூரில் கடந்த மாா்ச் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில், நிா்வாகக் குழுவின் புதிய தலைவராக பிலிப்பின்ஸ் ஆளுநா் அட்மிரல் ரோனி எல்.கவன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி வரை அந்தப் பதவியை வகிக்க உள்ளாா்.
ரிகாப் தகவல் பகிா்வு ஒத்துழைப்பில் இந்தியா, சீனா உள்பட 14 ஆசிய நாடுகளும், 5 ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்டவையும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன.