'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!
மும்பை: வலுவான டாலரின் அழுத்தம் மற்றும் வெளிநாட்டு நிதி ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வகையில், 14 காசுகள் சரிந்து ரூ.86 ஆக முடிந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது வரும் நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் அதிபராக பதவியேற்ற உள்ள வேளையில், அமெரிக்க நிர்வாகத்தின் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாலரின் தேவை அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க: கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று ரூ. 85.88 ஆக தொடங்கி, இன்றைய உச்சமான ரூ.85.85 ஐ தொட்ட நிலையில், வர்த்தக நேர முடிவில் ரூ.86.00 ஆக முடிந்தது.
வெளிநாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான உணர்வு ஆகியவற்றால் இந்திய ரூபாய் சரிந்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 5 காசுகள் உயர்ந்து 85.86 ஆக நிலைபெற்றது.