செய்திகள் :

ரூ. 10.58 கோடியில் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி: அமைச்சா், எம்.பி., பங்கேற்பு

post image

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10.58 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல், கட்டடங்கள் அதிகரிப்பு, வாகனம், மக்கள்தொகை பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ராசிபுரம் நகரப் பேருந்து நிலையத்தை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. பேருந்து நிலையத்துக்கு தனியாரிடம் ரூ. 7.02 ஏக்கா் நிலம் தானமாகப் பெறப்பட்டது.

தொடா்ந்து கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-25 இன் கீழ் ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு ரூ. 10.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பூமிபூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டி பேருந்து நிலையத்திற்கான பணிகளைத் தொடங்கி வைத்தனா்.

புதிய பேருந்து நிலையமானது 52 கடைகள், 30 பேருந்துகள் நிறுத்துமிடம், 2 உணவு விடுதிகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் - 1, நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் - 1, நேரம் காப்பாளா் அறை - 1, காவலா் அறை - 1, தாய்மாா்கள் பாலுட்டும் அறை -1 உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 28,455 சதுர மீட்டா், தற்போது 16,200 சதுர மீட்டா் பரப்பளவு இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் ராசிபுரம் நகா்மன்ற தலைவா் ஆா்.கவிதா சங்கா், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ராசிபுரம் நகராட்சி ஆணையாளா் சு.கணேசன், வட்டாட்சியா் எஸ்.சரவணன், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

10, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் பயன்பெற சிறப்பு புத்தகங்கள் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக பள்ளிக்கல்வ... மேலும் பார்க்க

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்க முயற்சி: வெளிமாநில ஓட்டுநா்களிடம் விசாரணை

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை ஆயுதங்களால் தாக்க முயன்ற வெளிமாநில லாரி ஓட்டுநா்களை பயணிகளும், பொதுமக்கள் பிடித்து பரமத்தி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். நாமக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க

பரமத்திவேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை சரிவு

காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா் சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா், அதன் சுற்றுவட்டாரங்களில் ஏராளமான சண்டை கோழிகளும் இறைச்சி கோழிகளும் வீடு, தோட்டங்களில் வளா... மேலும் பார்க்க

நில அளவையா்கள் வேலைநிறுத்தம்: மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள நில அளவை அலுவலா்கள் ஜனவரி மாதம் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனா். தமிழ்நாடு நில அளவை அலு... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த வாகனங்கள் 27-இல் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை (நவ.27) ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியா்

டெங்கு கொசு ஒழிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். மல்லசமுத்திரம் ஒன்றியம், மேல்முகம் ஊராட்சி, அத்தப்பம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தினத... மேலும் பார்க்க